நடிகர் மாரிமுத்து மறைவு; ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் - கமல்ஹாசன்

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-09 03:25 GMT

சென்னை,

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் முடித்து வீட்டிற்கு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.

பிரபல சின்னத்திரை தொடரான 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மாரிமுத்து பிரபலமானார். அதுமட்டுமின்றி தமிழில் பரியேறும் பெருமாள், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார்.

அவரது திடீர் மரணம் திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை தேரிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு அவரது உடலை தகனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


c

Tags:    

மேலும் செய்திகள்