நடிகர் மம்முட்டிக்கு ரூ.360 கோடி சொத்து...!

மம்முட்டி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது

Update: 2023-09-09 08:48 GMT

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வக்கீலுக்கு படித்து சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் 1971-ல் 'அனுபவங்கள் பலிச்சகல்' என்ற படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.

இவர் தமிழில் 'மவுனம் சம்மதம்', 'அழகன்', 'தளபதி', 'கிளிப்பேச்சு கேட்க வா', 'மக்களாட்சி', 'அரசியல்', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 'ஆனந்தம்', 'பேரன்பு' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

தற்போது மம்முட்டி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. மம்முட்டியின் வருட வருமானம் ரூ.50 கோடி, ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ.4 கோடி பெறுகிறார்.

2022-ல் மம்முட்டிக்கு ரூ.310 கோடி சொத்துகள் இருந்த நிலையில், இப்போது அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.360 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்