காதலியை மணக்கும் நடிகர் கவின்...!

நடிகர் கவினுக்கு திருமணம் முடிவாகி உள்ளது.

Update: 2023-08-03 03:07 GMT

தொலைக்காட்சி தொடர்களில் நடித்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தமிழில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து லிப்ட் படத்திலும் நாயகனாக நடித்து இருந்தார்.

கவின் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த டாடா படம் வெற்றி பெற்று அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது மேலும் 2 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கவினுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இவர் தனியார் பள்ளியில் பணியாற்றும் மோனிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கவின்-மோனிகா திருமணம் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்