நுபுர் சர்மாவுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு- கங்கனா ரனாவத் ஆதரவு
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்து உள்ளார்.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்து உள்ளார்.புதுடெல்லி
பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர்ளாக இருந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி குறித்து அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இருவரும் பா.ஜ.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து, பா.ஜ.க. ஊடகப் பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள், தலைவர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கலாம். எந்தவொரு மதத்தின் தலைவர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்து உள்ளார்.
"நுபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்.
நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து டான் ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்" என்று கூறி நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இக்கருத்தை பதிவு செய்துள்ளார்.