ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் அதிரடி படம்

Update: 2023-08-11 08:00 GMT

கமல்ஹாசன் நடித்த `தூங்காவனம்' மற்றும் விக்ரம் நடித்த `கடாரம் கொண்டான்' ஆகிய பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜேஷ் எம்.செல்வா. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இவர் அடுத்து டைரக்டு செய்ய இருக்கும் புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சென்னை மற்றும் டெல்லியில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. சைமன் கே கிங் இசையமைக்க, சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார்.

பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்