அபிஷேக் பச்சன் நடித்த 'பி ஹேப்பி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹேப்பி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.;

Update: 2024-09-21 12:24 GMT

மும்பை,

அபிஷேக் பச்சன் பிரபல பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெப்யூஜி (2000) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தூம், யுவா, சர்கார், குரு போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது அபிஷேக் பச்சன் 'பி ஹேப்பி' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லிசெல் ரெமோ டிசோசா தயாரித்துள்ளார்.

இந்த படம் "நாட்டின் மிகப்பெரிய நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கனவுடன் இருக்கும் மகளின் கணவை நிறைவேற்றும் தந்தையின் கதையை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை" காட்டும் வகையில் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் தந்தையாக அபிஷேக் பச்சனும், மகளாக வர்மாவும் நடித்துள்ளனர். இந்தநிலையில் சர்வதேச மகள்கள் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அமேசான் பிரைம்  வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நடிகர் அபிஷேக் பச்சன் 'கிங்' படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்