மன்னிப்பு கேட்ட அமீர்கான்

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Update: 2022-08-13 02:30 GMT

நடிகர் அமீர்கான் கடந்த 2015-ல் "நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று எனது மனைவி அறிவுறுத்தினார்" என்று பேசியதை சிலர் சமூக வலைத்தளத்தில் தற்போது பகிர்ந்து அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இது பரபரப்பாகி உள்ளது. தனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று அமீர்கான் வேண்டுகோள் விடுத்து வந்தார். இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் பேசும்போது,"நான் யாரையாவது, எந்த வகையிலாவது மனதளவில் காயப்படுத்தி இருந்தால் அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. என் படத்தை யாராவது பார்க்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்