அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அட்லீ இயக்கிவரும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2022-06-03 09:29 GMT

சென்னை,

2013-ம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். தற்போது இயக்குனர் அட்லீ நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அட்லீ இயக்கிவரும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி இப்படத்திற்கு 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த படத்தின் டீசரையும் வெளியிட்டு ,ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.அதன்படி 'ஜவான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்