தமன்னா பகிர்ந்த ஆன்மிக அனுபவம்
ஆன்மிக அனுபவம் குறித்து நடிகை தமன்னா வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது,
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக ஆன்மிக விஷயங்களில் தமன்னா ஈடுபாடு காட்டி வருவதை பார்க்க முடிகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டார். பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் சென்று வந்தார். ஆன்மிக பயணம் தனக்கு முதல்முறையாக உற்சாகமான உணர்வை தந்தது என்றார். இந்த நிலையில் தற்போது ஈஷா யோகா மையத்துக்கு சென்று தியானம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தியானம் மூலம் பெற்ற ஆன்மிக அனுபவம் குறித்து தமன்னா வெளியிட்டுள்ள பதிவில், ''ஈஷா யோகா மையத்தில் நான் இருந்த நாட்கள் வாழ்க்கையில் அழகானவை. 3 நாட்கள் கடந்துள்ளன. சாம்பவி கிரியாவைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டதில் இருந்து நமது உலகம் எவ்வளவு ஆச்சரியமானது என்பதை அனுபவிப்பது வரை உள்மனதில் ஒவ்வொரு நொடியும் புத்துயிர் பெற்றேன். பல ஆரோக்கிய நலன்கள் கிடைத்தன. எனது ஆன்மிகப் பயணத்தை ஒரு கிரியாவில் தொடங்கியதை பாக்கியமாக உணர்கிறேன்." என்று கூறியுள்ளார்.