கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் புதிய பாடல் வெளியானது

கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தை இயக்குனர் இளன் இயக்கியுள்ளார்.;

Update:2024-04-05 14:56 IST
கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் புதிய பாடல் வெளியானது

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் 'ஸ்டார்' படத்தின் 2-வது பாடலான 'விண்டேஜ் லவ்' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்