தேசிய விருது பெற்ற இயக்குனரின் புதிய படம்

சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update: 2022-10-14 02:53 GMT

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படம் நல்ல வசூலை பார்த்தது. இந்தப் படத்தின் 2-ம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது. சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற சுதா கொங்கரா டைரக்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

'சூரரைப் போற்று' படத்தின் மூலம் பிரபலமடைந்த சுதா கொங்கரா, அந்தப் படத்தை தற்போது இந்தியில் 'ரீமேக்' செய்கிறார்.

இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது தனது கனவு திரைப்படம் என்றும், இது இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படமாக இருக்கும் என்றும் சுதா கொங்கரா தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்