ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்த படத்தை இயக்கிய இந்திய இயக்குனர்கள்
இந்திய சினிமாவில் 7 திரைப்படங்கள் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.;
சென்னை,
இந்திய சினிமாவில் 7 திரைப்படங்கள் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. இவ்வாறு ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களை இயக்கிய இயக்குனர்கள் யார்? யார்? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்
1. தங்கல்
அமிர்கான், கிரன் ராவ், சித்தார்த் ராய் கபூர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தங்கல். இப்படம் வெளியாகி ரூ. 2,024 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை இயக்கியவர் நிதிஷ் திவாரி.
2.பாகுபலி 2
பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், தமன்னா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. இப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றியைத்தொடர்ந்து பாகுபலி 2 உருவானது. ரூ.1,788 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருந்தார்.
3.ஆர்.ஆர்.ஆர்.
ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலியா பட் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ரூ.1,230 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றது. இந்த படத்தையும் எஸ்.எஸ்.ராஜமவுலிதான் இயக்கினார்.
4.கேஜிஎப் 2
ஸ்ரீநிதி ஷெட்டி, யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றியைத்தொடர்ந்து கேஜிஎப் 2 உருவானது. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் ரூ.1,215 கோடிக்கு மேல் வசூலித்தது.
5.ஜவான்
நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ஜவான். ரூ. 300 கோடி பட்ஜெட்டி உருவான இப்படம் ரூ.1,160 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்கினார்.
6. பதான்
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் ரூ. 1,055 கோடிக்கு மேல் வசூலித்தது.
7. கல்கி 2898 ஏடி
பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கிய இப்படம் இதுவரை ரூ.1,030 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.