69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார் ..!

2021-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

Update: 2023-10-17 13:34 GMT

புதுடெல்லி,

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் அடிப்படையிலான திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக 'கடைசி விவசாயி' தேர்வு செய்யப்பட்டு அதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

மேலும் சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன் (புஷ்பா: தி ரைஸ்), சிறந்த நடிகைகளாக ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி) மற்றும் கீர்த்தி சனோன் (மிமி), சிறந்த படமாக மாதவனின் 'ராக்கெட்ரி' உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஆர்.ஆர்.ஆர் பட இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத், மற்றும் பொழுதுபோக்கு அல்லாத பிரிவில் கருவறை படத்திற்காக ஸ்ரீகாந்த தேவாவுக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பழம்பெரும் இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடிகர்கள் மாதவன், அல்லு அர்ஜூன், நடிகைகள் ஆலியா பட், கிர்த்தி சனோன், இயக்குனர்கள் ராஜமவுலி, மணிகண்டன், பாடகி ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு விருதுகளை பெற்றனர். 


விருது வழங்கும் விழாவின் புகைப்பட தொகுப்பு : 

விருதை பெற்றுக்கொண்ட அல்லு அர்ஜுன்


விருது வழங்கும் விழாவில் கணவர் ரன்பிர் கபூருடன் நடிகை ஆலியா பட் 


தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்ட நடிகை வஹீதா ரஹ்மான் 


விருதை பெற்றுக்கொண்ட நடிகை ஆலியா பட் 


 

 


 


Tags:    

மேலும் செய்திகள்