சீரடி சாய்பாபா கோவிலில் காதலருடன் நயன்தாரா சாமி தரிசனம்

சீரடி சாய்பாபா கோவிலில் காதலருடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-05-06 06:30 GMT
நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 8 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று ஏற்கனவே வந்த கிசுகிசுக்களை விக்னேஷ் சிவன் மறுத்தார். விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று நயன்தாரா அறிவித்தார். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண தேதியை முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமார் நடிக்கும் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்ய இருக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க இருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பு திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர். சீரடி கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்