நிர்வாண காட்சியில் நடித்த ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா “பிசாசு-2 படத்தில் 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடித்தார்.

Update: 2022-05-01 02:07 GMT
தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. கிளுகிளுப்பான குரலில் இவர் பாடும் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா' படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா...' பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த ‘பிசாசு-2' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் இந்த படம் குறித்து சில தகவல்களை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது:-

“பிசாசு-2 படத்தில் 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்தபோது, என்னை மிகவும் கட்டாயப்படுத்தினார்கள். நான் நன்றாக யோசித்து பார்த்தேன். அது தரமான கதை என்பதால் நிர்வாணமாக நடித்தேன்”.

இவ்வாறு நடிகை ஆண்ட்ரியா கூறினார்.

மேலும் செய்திகள்