கேஜிஎப்-2' படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன், இளையராஜா

நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் இளையராஜாவும் கேஜிஎப்-2' படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தனர்.;

Update: 2022-04-29 09:22 GMT
சென்னை,

கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14 ஆம் தேதி வெளியாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை திருமங்கலத்தில் உள்ள திரையரங்கில், கமல்ஹாசன் மற்றும் இளையராஜா ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்