நடிகை பலாத்கார வழக்கு... பிரபல மலையாள நடிகர் தலைமறைவு

நடிகை பலாத்கார வழக்கில் பிரபல மலையாள நடிகர் தலைமறைவாகி விட்டார்.;

Update: 2022-04-29 05:58 GMT
பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு. இவர் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். 15-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். விஜய் பாபு மீது மலையாள இளம் நடிகை எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். 

அதில் விஜய் பாபு எனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி அவரது வீட்டுக்கு அழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். என்னை ஆபாச வீடியோ எடுத்து வைத்து இருப்பதாகவும் மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த புகாரை விஜய் பாபு தனது முகநூல் பக்கத்தில் நடிகையின் பெயரை குறிப்பிட்டு மறுத்தார். புகார் கொடுத்த நடிகை நான் தயாரித்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். அந்த படத்தின் வெற்றி விழாவுக்கு அவர் வரவில்லை. அதன்பிறகு அந்த நடிகையை நான் தொடர்பு கொள்ளவில்லை என்றார். விஜய் பாபு கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். 

போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். நடிகையின் பெயரை வெளியிட்டதாக விஜய் பாபு மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்