‘பிரியா பவானி சங்கர் நெருக்கமான தோழியாக மாறிவிட்டார்’ - நடிகர் சதீஷ் சொல்கிறார்
அசோக் செல்வன், சதீஷ், பிரியா பவானி சங்கர் நடித்து, சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஹாஸ்டல்’. இந்த படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சதீஷ் கூறியதாவது:-
ரொம்ப ஜாலியாக வேலை பார்த்த படம் இது. எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் தங்கி படித்ததில்லை. ஆனால், நண்பன் ஹாஸ்டலில் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்த படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது.
இப்போது அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் 3 கதாநாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்த்து பொறாமையாக இருந்தது. பிரியா பவானி சங்கர் என் நெருக்கமான தோழியாக மாறிவிட்டார். இந்த படத்தின் டைரக்டர் சுமந்த் ராதாகிருஷ்ணன் என் நண்பர். படப்பிடிப்பின்போது நன்றாக கவனித்துக்கொண்ட தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரனுக்கு நன்றி.
இவ்வாறு நடிகர் சதீஷ் பேசினார்.