பரத் நடிக்கும் 50-வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.;

Update: 2022-04-22 11:47 GMT
கோப்புப் படம்
சென்னை,

நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது. திரில்லர் வகை கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கிறது. லூசிபர், மரைக்காயர், குரூப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு 'லவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன் லால், ஆர்யா உள்ளிட்ட 50 திரைப்பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்