சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுகிறேன் - விஷ்ணு விஷால்

நான் சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்து உள்ளார்.

Update: 2022-04-22 07:01 GMT
சென்னை:

நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தனது படங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமின்றி சமூக கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக விஷ்ணு விஷால் அறிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் விஷணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், ''ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். நான் சமூக வலைத்தளங்களில் இருந்து கொஞ்ச காலத்துக்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்''என்று கூறியுள்ளார். 

விஷ்ணு விஷால் முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஷ்ணு விஷால் தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வந்த ராட்சசன் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. எப்.ஐ.ஆர் படமும் நல்ல வசூல் பார்த்தது. தற்போது மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்