தலையை மொட்டை அடித்த பிரபல நடிகை

அழகு பார்ப்பவர்கள் கண்களில் தான் இருக்கிறது. அதனால் தான் நான் முடியை தியாகம் செய்துவிட்டேன் என சஞ்சனா கல்ராணி குறிப்பிட்டு இருக்கிறார்.

Update: 2022-04-07 08:43 GMT
தமிழில் “ஒரு காதல் செய்வீர்” படத்தில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.

சஞ்சனா கல்ராணி கடந்த 2020-ல் போதை பொருள் வழக்கில் கைதாகி சில மாதங்கள் சிறையில் இருந்து, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அஜீஸ் பாஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையை மொட்டை அடித்துக்கொண்டு இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். மொட்டை தலை புகைப்படத்தின் கீழ் சஞ்சனா வெளியிட்டுள்ள பதிவில், “நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். பார்ப்பவர்கள் கண்களுக்கு நான் அழகாக தெரிகிறேன். எனவே தலைமுடியை தியாகம் செய்துவிட்டேன். பல கஷ்டங்களை கடந்து வாழ்க்கை மீண்டும் அழகாக மாறி இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. எனது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்