பா. ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.;

Update: 2022-03-30 13:46 GMT
சென்னை,

இயக்குனர்கள் வெங்கட்பிரபு மற்றும் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  சுரேஷ்மாரி தற்போது நடிகர் தினேஷ் நடிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு 'ஜே. பேபி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஜே. பேபி திரைப்படத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பும் ராமு தங்கராஜ் கலை இயக்கமும் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் செய்திகள்