பிரபல நடிகர் கைது
பிரபல ஹாலிவுட் நடிகர் எஸ்ரா மில்லர் பாரில் தகராறில் ஈடுப்பட்டதால் போலீசார் கைது செய்தனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் எஸ்ரா மில்லர். இவர், சிட்டி ஐலேண்ட், ஜஸ்டிஸ் லீம், அனதர் ஹேப்பி டே, பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ், மேடம் போவரி உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது ‘தி பிளாஷ்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். எஸ்ரா மில்லர் ஹவாய் தீவில் ஹிலோ என்ற பகுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்றார்.
அந்த பாரில் சிலர் பாடிக்கொண்டு இருந்தார்கள். அதனை ரசித்து பார்த்தார். பின்னர் திடீரென்று ஆவேசமாக சத்தம் போட ஆரம்பித்தார். எஸ்ரா மில்லரிடம் அமைதியாக இருக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தினர் எச்சரித்தனர். அதை காதில் வாங்காமல் பாடிக்கொண்டு இருந்த பெண்ணிடம் இருந்து மைக்கை பிடுங்கி தகராறு செய்தார்.
ஒரு இளைஞரை அடிக்கவும் பாய்ந்தார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து எஸ்ரா மில்லரை கைது செய்தனர். பின்னர் பிணைத் தொகை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.