எடை கூடி ஆளே மாறிப்போன அனுஷ்கா
உடல் எடை கூடி, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அனுஷ்கா ஷெட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்காவுக்கு இரு மொழிகளிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், தெய்வ மகள், தாண்டவம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்கள் தமிழில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. பாகுபலி இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. கடைசியாக 2020-ல் வெளியான சைலன்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.
இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி குண்டு பெண்ணாக அனுஷ்கா நடித்து இருந்தார். அதன்பிறகு எடையை அவரால் குறைக்க முடியவில்லை. வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எடை குறையவில்லை. இதனால் கதாநாயகி வாய்ப்புகளை இழந்தார். ஏற்கனவே ஜோடியாக சேர்த்துக்கொண்ட கதாநாயகர்கள் இப்போது அவரது தோற்றத்தை பார்த்து ஒதுக்குகின்றனர்.
இந்த நிலையில் அனுஷ்கா தற்போது பட விழா நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற வீடியோ வெளியாகி வைரலாகிறது. அதில் அனுஷ்கா உடல் எடை கூடி ஆளே மாறிப்போய் இருக்கிறார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி அனுஷ்காவா இது? இப்படி மாறி விட்டாரே. எப்படி மாறினாலும் எப்போதும் எங்களுக்கு பிடித்த நடிகை நீங்கள்தான் என்று வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.