கேங்ஸ்டராக களமிறங்கும் சரண்யா பொன்வண்ணன்..!

நடிகை சரண்யா பொன்வண்ணன் கேங்ஸ்டராக நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-26 00:13 GMT
கோப்புப் படம்
சென்னை,

நடிகை சரண்யா பொன்வண்ணன் தற்போது இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கும் படமொன்றில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையை மையமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்திய ஒரு கும்பலின் கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ராஜ் வர்மா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அம்சத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஜீவா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த திரைப்படத்திற்கு 'கேங்ஸ்டர் கிரானி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கையில் பெரிய துப்பாக்கியுடன் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஜீவா, 'சரண்யா பொன்வண்ணன் அதிரடியாக திரும்பி வந்துள்ளார். ஆனால் இந்த முறை சாதாரண தாயாக அல்ல. அசாதாரண கேங்ஸ்டர் பாட்டியாக' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்