இது, உயிருக்கு உயிராக காதலிக்கும் ஒரு இளம் ஜோடியை பற்றிய படம். இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்கிறது. இருவரையும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் நடக்கின்றன. காதல் ஜோடி சேர்ந்தார்களா, அல்லது பிரிந்தார்களா? என்பது படத்தின் கதை.
இதில் கதாநாயகனாக காளிங்கராயன், கதாநாயகியாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த சல்மிதா ஆகியோருடன் ஆர்.சுந்தர்ராஜனும் நடித்துள்ளார். ஹால்வின் தயாரிக்கிறார். ஓசூர், பெரம்பலூர் பகுதிகளில் படம் வளர்ந்து இருக்கிறது.