‘டாணாக்காரன்’ படம் ‘‘விக்ரம் பிரபுவுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும்’’

‘டாணாக்காரன்’ படம் ‘‘விக்ரம் பிரபுவுக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும்’’ என டைரக்டர் தமிழ் கூறுகிறார்.

Update: 2022-03-25 09:36 GMT
சிறந்த கதையம்சம் உள்ள படங்களையும், பொருத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம் பிரபு, தற்போது ‘டாணாக்காரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி டைரக்டராக இருந்த தமிழ் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:-

‘‘டாணாக்காரன் படத்தின் கதை சம்பவங்கள் 1998-ம் ஆண்டில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல் துறை சார்ந்த திரைப்படங்களை கண்டுள்ளது. அந்த படங்களில் இருந்து ‘டாணாக்காரன்’ மாறுபட்டு இருக்கும். இதுவரை திரையில் பார்த்திராத உலகத்தை காட்டும்.

அதுபோல் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் கதாபாத்திரம் மாறுபட்டு இருக்கும். அவர் நடித்த படங்களில் ஒரு மைல் கல்லாக இருக்கும். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். அஞ்சலி நாயர் கதாநாயகியாகவும், லால், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.’’

மேலும் செய்திகள்