கவர்ச்சி உடையில் தமன்னா
தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகிகளில் நடிகை தமன்னாவும் ஒருவர். சிம்ரனுக்கு அடுத்தபடியாக 'இடுப்பழகி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். ஹோலி பண்டிகையையொட்டி தமன்னா புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.;
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.
ஹோலி பண்டிகையையொட்டி தமன்னா புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
'ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?', 'இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?' என்று வசை பாடுகிறார்கள். 'கண்ணாடி போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது', என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்.