பனை மரத்தின் அருமை பற்றி கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்

பனை மரத்தின் மகிமை பற்றி கவிஞர் வைரமுத்து 3 பாடல்களை மிக சிறப்பாக எழுதியிருக்கிறார்.

Update: 2022-03-18 06:55 GMT
“பனை மரம் வளர்க்கப்பட வேண்டும்... பனைத் தொழிலும், பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பனை மரம் தேசமெங்கும் பரவ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி, ‘பனை’ படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்கிறார், அந்தப் படத்தின் டைரக்டர் ஆதி பி.ஆறுமுகம். இவர் மேலும் கூறும்போது...

“படத்தில் கதையின் நாயகனாக ஹரீஸ் பிரபாகரன், நாயகியாக மேக்னா நடிக்க, வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். எம்.ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.

பனை மரத்தின் மகிமை பற்றி கவிஞர் வைரமுத்து 3 பாடல்களை மிக சிறப்பாக எழுதியிருக்கிறார். ‘பாகுபலி’ படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியின் உதவியாளர் மீராலால் இசையமைத்து இருக்கிறார்” என்றார்.

மேலும் செய்திகள்