”ராக் வித் ராஜா” இசை நிகழ்ச்சி: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் : இளையராஜா நெகிழ்ச்சி
சென்னையில் நாளை 'ராக் வித் ராஜா' என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது;
சென்னை
இசைஞானி இளையராஜாவின் இசை இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரின் இசை கச்சேரிகளை பல நாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நாளை 'ராக் வித் ராஜா' என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது.இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, பாட்டு பாடி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் இளையராஜா .
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம். Be there..#RockWithRaaja 🔥
— Ilaiyaraaja (@ilaiyaraaja) March 17, 2022
Tickets 🎟 https://t.co/alH2HpLNg3@paytminsider
📆 #March18 2022
📍Theevu Thidal ( Island Grounds)#LiveInConcert#Mercuri#NoiseandGrainspic.twitter.com/tyKlc0Zkdq