நடிகர் விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்..!

நடிகர் விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

Update: 2022-03-17 14:00 GMT
சென்னை ,

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்தனர்.

முதல் பாகத்தை இயக்கிய சசி, வேறு படவேலைகளில் பிசியாக இருப்பதால் இரண்டாம் பாகத்தை பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளதாக கடந்தாண்டு அறிவித்தனர். பின்னர் சில காரணங்களால், பிரியா கிருஷ்ணசாமியும் இப்படத்தில் இருந்து விலகினார்.

அதன்பின் இப்படத்தை தானே இயக்க உள்ளதாக விஜய் ஆண்டனி அதிரடியாக அறிவித்தார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடிப்பதோடு இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் பிச்சைக்காரன்' 2 ' படத்தின் புதிய அப்டேட் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார் .

பிச்சைக்காரன் '2' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் ,விரைவில் சிந்திப்போம் எனவும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் 

மேலும் செய்திகள்