30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் அருணா
30 வருடங்களுக்கு பிறகு அருணா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அருணா. இவர் கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிவப்பு மல்லி, கரிமேடு கருவாயன், டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, பெண்மணி அவள் கண்மணி, இதயத்தை திருடாதே உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 1987-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகினார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். சமீப காலமாக அருணா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் 30 வருடங்களுக்கு பிறகு அருணா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் நயன்தாரா, சத்யதேவ் ஆகியோரும் நடிக்கின்றனர். மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக காட்பாதர் தயாராகிறது. தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.