நடிகர் திலீப் மனு கோர்ட்டில் தள்ளுபடி

திலீப்பின் புதிய மனுவை விசாரித்த கேரள கோர்ட்டு அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

Update: 2022-03-10 09:10 GMT
நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் உள்பட 6 பேர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கிலும் திலீப் நிபந்தனை ஜாமீன் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் திலீப் கேரள ஐகோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்தார். அதில் என்மீது தொடரப்பட்ட நடிகை கடத்தல் வழக்கு விசாரணை ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து மீண்டும் விசாரணை நடப்பது வழக்கை திசை திருப்புவதாக உள்ளது. எனவே இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும். இல்லையேல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

நடிகை கடத்தல் வழக்கில் புதிய சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும், ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்குள் போலீசார் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்