பரபரப்பான கதைக்களத்தில் ‘அகிலம் நீ’
பரபரப்பான கதைக்களத்தில் தயாராகி இருக்கிறது, ‘அகிலம் நீ’.
வேறு வேறு மதங்களைச் சேர்ந்த சரவணனும், ரீனாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். இந்த நிலையில், நர்சிங் வேலைக்கு சென்ற ரீனா வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் ரீனா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளி பற்றிய விவரம் தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இப்படி ஒரு பரபரப்பான கதைக்களத்தில் தயாராகி இருக்கிறது, ‘அகிலம் நீ.’ இதில் விஜித் கோகிலா, பேபி அக்ஷயா, முத்துக்காளை, கராத்தே ராஜா, ராஜேந்திரநாத், ஜெயந்தி மாலா நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி சேட்டிபாலன் இயக்கியிருக்கிறார். டி.சிவபெருமாள் தயாரித்துள்ளார்.