ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செல்பி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செல்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவி்த்துள்ளது.;

Update: 2022-03-03 21:26 GMT
சென்னை,

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் பேச்சிலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

இந்த நிலையில் இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் வகை திரைப்படம் 'செல்பி' . இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய 'வி கிரியேசன்ஸ்' மூலம் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் செல்பி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி செல்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்