கடுக்கன், தாடியுடன் உள்ள அஜித்தின் புகைப்படம்- இணையத்தில் வைரல்

நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.;

Update: 2022-03-03 04:00 GMT
சென்னை,

தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் அஜித் குமார். தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எப் 1 ரேஸராகவும் புகழ் பெற்றவர்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படமான 'வலிமை'  வெளியாகி நான்கு நாட்களில், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களால் குட்டி தல என்று அழைக்கப்படும், அஜித்தின் மகனான ‘ஆத்விக்’ பிறந்தநாளை முன்னிட்டு அஜித் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்
ஆகியுள்ளது. 

அதில் கடுக்கன், தாடியுடன் உள்ள அஜித்துடன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் குமார்,மகள் அனுஷ்கா குமார் உள்ளிட்டோர் உள்ளனர். இதனை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்துவருகின்றனர்.


மேலும் செய்திகள்