வில்லியான அஞ்சலி
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அஞ்சலி ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவர் வில்லியாக நடிக்கிறார்.
கதாநாயகர்களைப்போல் கதாநாயகிகளும் வில்லியாக நடிக்க தொடங்கி உள்ளனர். திரிஷா ஏற்கனவே கொடி படத்தில் வில்லியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அஞ்சலியும் வில்லியாகிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவர் வில்லியாக நடிக்கிறார். அஞ்சலிக்கு கதாபாத்திரம் பிடித்து இருப்பதாகவும் இதனால் வில்லியாக நடிக்க அவர் சம்மதித்து உள்ளார் என்றும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து அஞ்சலி வில்லியாக நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.