புஷ்பா படத்திற்க்கு சிறந்த திரைப்படத்திற்க்கான விருது..!
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது 2022 ல் சிறந்த திரைப்படத்திற்க்கான விருதை புஷ்பா பெற்றுள்ளது.
சென்னை,
தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று இரவு மும்பையில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து தயாரான 83 படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது.
இதுபோல் சிறந்த படத்துக்கான விருதை புஷ்பா படம் பெற்றது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து இருந்தனர். செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவான இந்த படம் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி மொழிகளிலும் வெளியானது. உலக அளவில் புஷ்பா படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
மேலும் இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் பெற்றார். சிறந்த நடிகை விருது மிமி படத்தில் நடித்த கீர்த்தி சனோனுக்கு வழங்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஷேர்ஷா படமும் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.