'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் வெளியானது..!
விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கண்மணியாக நடித்துள்ள நயன்தாரா மற்றும் கதிஜாவாக நடித்துள்ள சமந்தா என இரண்டு பேரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுக்கு இடையேயான பயணத்தை உணர்வுகளுடன் காமெடி, ரொமான்ஸ் கலந்து முக்கோண காதல் கதையாக படம் தயாராகி உள்ளது.
மேலும் டீசரின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Here it is 🤩🤩#KRKTeaser - https://t.co/whdJf6lqSM
— Seven Screen Studio (@7screenstudio) February 11, 2022
IN THEATRES FROM APRIL 28🔥#KaathuVaakulaRenduKaadhal ♥️♥️#Anirudh25
A @VigneshShivN Directorial🎬
An @anirudhofficial Musical🪗@VijaySethuOffl#Nayanthara@Samanthaprabhu2@Rowdy_Pictures@SonyMusicSouth@proyuvraajpic.twitter.com/rieBArfadN