அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.

Update: 2022-02-09 17:08 GMT
சென்னை,

நடிகர் அசோக் செல்வன் தற்போது ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் சிவாத்மிகாவுடன் இணைந்து மூன்று கதாநாயகிகள் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆர்.ஏ. கார்த்திக் இயக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. 

படத்தின் டைட்டிலை நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் இந்த திரைப்படத்திற்கு 'நித்தம் ஒரு வானம்' என்றும் தெலுங்கில் 'ஆகாசம்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. இந்த திரைப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். பெண்டெலா சாகருடன் இணைந்து வியகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகள்