‘எப்.ஐ.ஆர்’ படம் பெரிய தொகைக்கு வியாபாரம்: விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால், ‘எப்.ஐ.ஆர்.’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படம் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்று விஷ்ணு விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-06 08:44 GMT
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான விஷ்ணு விஷால், தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘பலே பாண்டியா’, ‘ராட்சசன்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இதில், ‘ராட்சசன்’ படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. அந்த படம் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து விஷ்ணு விஷால், ‘எப்.ஐ.ஆர்.’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம், மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுபற்றி படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் கூறியதாவது:-

‘‘ராட்சசன் படம் எனக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி தந்தது போல் ‘எப்.ஐ.ஆர்.’ படமும் மேலும் ஒரு திருப்பமாக அமைந்துள்ளது. படம் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. இதுவரை 250 பேர், இந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள். அத்தனை பேரும் படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளனர். படத்துக்கு சிறப்பு சேர்ப்பது போல் ரெட் ஜெயன்ட் மூவீஸ், இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது’’ என்றார்.

மேலும் செய்திகள்