ஸ்ரீதிவ்யா ஜோடியுடன் விக்ரம் பிரபுவின் புதிய படம், ‘டைகர்'
‘புலிக்குத்தி பாண்டி' படத்தை அடுத்து விக்ரம் பிரபு பரபரப்பான திகில் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘டைகர்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதுபற்றி அந்தப் படத்தின் டைரக்டர் கார்த்தி சொல்கிறார்.
“விக்ரம் பிரபு, அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘புலிக்குத்தி பாண்டி' படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில் நடித்த அவர், ‘டைகர்' படத்தில் துணிச்சல் மிகுந்த நாகரிக இளைஞராக நடிக்கிறார்.
`டைகர்' படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக் கும். ‘வெள்ளக்காரத்துரை' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா ஜோடி, ‘டைகர்' படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
சக்தி வாசு வில்லனாக நடிக்கிறார். அனந்திகா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகர்-நடிகைகளும் பங்கு பெறுகிறார்கள். கதை-வசனத்தை முத்தையா எழுதியிருக் கிறார்.
எம் ஸ்டூடியோஸ், ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன''.