சாய்பல்லவியின் நடன ஆர்வம்
தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே. படங்களில் நடித்துள்ள சாய்பல்லவி தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். சாய்பல்லவி நடனத்துக்கென்றே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
நடன ஆர்வம் குறித்து சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில், “நான் 5-வது வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடந்த நடன போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றேன். அதன் பிறகு நடனம் ஆடும்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்ற விஷயம் புரிந்தது. படிப்படியாக என் வாழ்க்கையில் நடனம் ஒரு அங்கமாகிவிட்டது. வீட்டில் என் அம்மா அழைத்தால் நடனமாடிக்கொண்டே செல்லுவேன். நான் மிகப்பெரிய டான்சர் என்கிற எண்ணம் எனக்கு இல்லை.
நடிகைகள் ஷோபனா, ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் போன்ற மிகச்சிறந்த டான்சர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். சாஸ்திரிய நடனம் கற்றுக்கொள்வதற்கு ஒரு அர்ப்பணிப்பு, திடசங்கல்பம் இருக்க வேண்டும். நான் எங்கும் சாஸ்திரீய நடனம் கற்றுக்கொள்ளவில்லை. ரவுடி பேபி பாடல் பிரபு தேவா, தனுஷ் இருந்ததால் சுலபமாக வந்தது. நான்கு நாட்கள் மட்டுமே அந்த பாடலுக்காக நாங்கள் பயிற்சி செய்தோம்’’ என்றார்.