கமல்ஹாசனின் பாராட்டை பெற்ற புது டைரக்டர்

அறிமுக டைரக்டர் அஸ்வின் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. இதைப்பார்த்து ரசித்த கமல்ஹாசன், டைரக்டர் அஸ்வினையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்.;

Update: 2021-12-31 10:53 GMT
தமிழ் திரையுலகின் பாரம்பரியம் மிகுந்த பட நிறுவனங்களில் ஒன்று, சத்யஜோதி பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக டைரக்டர் அஸ்வின் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது.

இதைப்பார்த்து ரசித்த கமல்ஹாசன், டைரக்டர் அஸ்வினையும், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டினார். அவர் நடித்து சர்வதேச அளவில் பெரும் புகழ் ஈட்டிய ‘மூன்றாம் பிறை’ படத்தை தயாரித்த நிறுவனம், சத்யஜோதி பிலிம்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனத்தின் நிறுவனரும், தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன் கூறியதாவது:

‘‘அன்பறிவு முற்றிலும் இளைஞர் பட்டாளத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட படம். இளைஞர்கள் மத்தியில் ஆதரவை பெற்ற ஹிப் ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். வருங்காலத்தில் முன்னணி நடிகராக ஜொலிப்பார்.

மூத்த நடிகர் நெப்போலியன், படத்தின் பெரும் பலம். கதாநாயகி காஷ்மீரா உள்ளிட்ட மற்ற நடிகர்-நடிகைகளின் ஒத்துழைப்பும், அர்ப் பணிப்பும் சொல்லில் அடங்காது. படத்தை பார்த்து கமல்ஹாசன் பாராட்டியது, மற்ற கலைஞர்களை ஊக்குவிக்கும்.

மொத்தத்தில், இந்தப் படம் எங்கள் நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும்.’’

மேலும் செய்திகள்