பிரபல நடிகைக்கு புற்றுநோய் - புகைப்படம் வெளியிட்டு தகவல்

தெலுங்கு பட நடிகை ஹம்ச நந்தினிக்கு புற்றுநோய் இருப்பதாக தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Update: 2021-12-21 10:37 GMT
விசாகப்பட்டினம்,

தெலுங்கில் அனுஷ்காவின் ருத்ரமாதேவி, ஜெய் லவ குசா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஹம்ச நந்தினி. இவர், தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார் .  
 
அதில், “கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு என் மார்பில் சிறு கட்டி இருந்ததை உணர்ந்தேன். மருத்துவமனைக்கு சென்ற என்னை பரிசோதனை செய்துவிட்டு மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறினார்கள். வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன். எனது அம்மா கொடிய நோயால் உயிரிழந்தார். அதிலிருந்து பயத்தில் வாழ்ந்து வந்தேன். பின்னர், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இதையடுத்து, உடனே அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றிவிட்டார்கள். ஆனால் அது அத்துடன் முடியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் புற்றுநோய் மீண்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்காக சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்து,  9 முறை ஹீமோதெரபி செய்து கொண்டேன்.  அடுத்து 7 முறை செய்ய வேண்டியிருக்கிறது. நான் நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்து கொள்கிறேன். புற்றுநோய் பாதிப்பில் இருந்து என்னால் வெல்ல முடியும் என நம்புகிறேன்’’ என்று கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்