ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

பால்கி இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

Update: 2021-12-20 09:30 GMT
அண்ணாத்த படம் திரைக்கு வந்த நிலையில் ரஜினிகாந்துக்கு லேசான உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிறார். ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பேசினார். இதனால் ரஜினியின் புதிய படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் சில இயக்குனர்களையும் அழைத்து ரஜினி கதை கேட்டதாக தகவல் வெளியானது. தேசிங்கு பெரியசாமியுடன் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், படையப்பா, லிங்கா படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் வெங்கட் பிரபு, பாண்டிராஜ் ஆகியோர் பெயர்களும் அடிபட்டன. 

இந்த பட்டியலில் தற்போது பிரபல இந்தி இயக்குனர் பால்கியும் இணைந்துள்ளார். பால்கி சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும், எனவே பால்கி இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. பால்கி ஏற்கனவே அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் உள்ளிட்ட சில இந்தி படங்களை இயக்கி உள்ளார்.

மேலும் செய்திகள்