நடிகர் சங்க தேர்தல்: மீண்டும் தலைவராக மோகன்லால் தேர்வு..!
மலையாள நடிகர் சங்க தேர்தலில் 2வது முறையாக மோகன்லால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
மலையாள நடிகர் சங்க தேர்தலில் 2வது முறையாக மோகன்லால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலையாள நடிகர் சங்க தேர்தல் நேற்று கொச்சியில் நடந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு, இணை செயலாளர் பதவிக்கு ஜெயசூர்யா, பொருளாளர் பதவிக்கு சித்திக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை இப்பதவிகளுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 2 துணை தலைவர்கள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் துணை தலைவர்களாக மணியன் பிள்ளை ராஜு மற்றும் நடிகை சுவேதா மேனன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக லால், விஜய் பாபு, பாபுராஜ், மஞ்சு பிள்ளை, லெனா, ரஜனா நாராயணன் குட்டி, சுரபி, சுதீர் கரமனா, டினி டோம், டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.