இலவச படிப்புக்காக விஜய் பள்ளிக்கூடம் கட்டுகிறாரா?
ஏழை மாணவர்கள் இலவசமாக படிப்பதற்காக சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் பரவி இருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது...
பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் அல்ல... அவருடைய உறவினர் பிரிட்டோ என்பது தெரியவந்துள்ளது. இவர், விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்தவர். அவருக்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு கல்லூரியும், பள்ளிக்கூடமும் இருக்கிறது. தற்போது திருப்போரூரில் கட்டுவது, இரண்டாவது பள்ளிக்கூடம்.
“இந்த பள்ளிக்கூட கட்டுமான பணிகளை சமீபத்தில் விஜய் சுற்றிப்பார்த்தார். உடனே விஜய் தான் பள்ளிக்கூடம் கட்டி வருகிறார் என்று வதந்தியை பரப்பி விட்டார்கள்” என்கிறார், பள்ளி நிர்வாகிகளில் ஒருவர்.