அதர்வாவின் அடுத்த படத்தின் டைட்டில் 'டிரிக்கர்'..!

நடிகர் அதர்வா நடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2021-12-16 13:43 GMT
சென்னை,

நடிகர் அதர்வா நடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சாம் ஆண்டன் இயக்கி உள்ள இந்த திரைப்படத்திற்கு 'டிரிக்கர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

கருப்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த தான்யா ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் அருண் பாண்டியன் அதர்வாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் கிருஷ்ணன் வசந்த் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் ஒரு தந்தையையும், அவரது துப்பாக்கியையும் பற்றிப் பேசுவதாகவும் அவர் அந்த துப்பாக்கியின் டிரிக்கரை இயக்குவாரா இல்லையா என்று கேள்வி எழுப்பும் விதமாகவும் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் படத்திற்கு டிரிக்கர் என்று தலைப்பு வைத்துள்ளதாக படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்