ஓடிடியில் வெளியாகிறது ஆதியின் 'அன்பறிவு' திரைப்படம்..!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள அன்பறிவு திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2021-12-15 15:44 GMT
சென்னை, 

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள புதிய திரைப்படம் 'அன்பறிவு'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டிமிட்டிருந்த நிலையில், தற்போது படம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா பரதேசி, சசிகுமார், ஆஷா சரத், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறை மனிதர்களுக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பை எடுத்துக்கூறும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும், நெப்போலியன் ஆதியின் தாத்தாவாகவும் சசிகுமார் ஆதியின் தந்தையாகவும் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்